Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

சிஎன்என், அமேசான் உட்பட - உலகளாவிய அளவில் முக்கிய இணையதளங்கள் செயலிழப்பு :

செய்தி இணையதளங்கள், சமூக வலைதளங்கள் உட்பட உலகளாவிய அளவில் பல்வேறு இணையதளங்கள் நேற்று திடீ ரென்று செயலிழந்தன.

பினான்ஸியல் டைம்ஸ், தி கார்டியன், சிஎன்என், தி நியூயார்க் டைம்ஸ் போன்ற செய்தி நிறுவனங்களின் இணையதளங்களும் அமேசான், ரெட்டிட்,டிவிட்ச், ஸ்பாட்டிபை, பின்ட்ரெஸ்ட் போன்ற தளங்களும் நேற்று திடீரென்று முடங்கின.

இந்தியாவில் ‘கோரா’வின் தளம் முடங்கியது. பயனாளர்கள் இந்தத் தளங்களுக்குள் சென்றபோது Error 503 service unavailable என்ற வந்தது.

சிடிஎன் (content delivery network) சேவையை வழங்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபாஸ்ட்லி (Fastly) என்ற நிறுவனத்தின் சர்வர்களில் ஏற்பட்ட பிரச்சினைதான் இந்த திடீர் செயலிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனமும் நேற்று செயலிழந்தது.

இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு இந்த செயலிழப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சில தளங்கள் மீண்டு செயல்பாட்டுக்கு வந்தன.

நிறுவனத்திடம் புகார் பதிவு

இந்த திடீர் செயலிழப்புக்கு ஃபாஸ்ட்லி நிறுவனம்தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில், நேற்று பங்குச் சந்தையில் அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரிவைக் கண்டது.

செயலிழப்புக்கான மூல காரணத்தை தீவிரமாக ஆராய்ந்து வருவதாக ஃபாஸ்ட்லி நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x