Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிஏ படிப்பு இலவச பயிற்சி தொடக்கம் :

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச சிஏ பயிற்சி வகுப்புகள் இன்று (ஜூன் 9) தொடங்குகின்றன. இதுகுறித்து தென்னிந்திய பட்டயக்கணக்காளா் நிறுவனத்தின் தலைவர் கே.ஜலபதி வெளியிட்ட அறிவிப்பு:

நடப்பாண்டு நவம்பரில் நடத்தப்பட உள்ள சிஏ தேர்வுக்கான பயிற்சிவகுப்புகள் இன்று (ஜூன் 9) தொடங்கி அக்.10-ம் தேதி வரை நடக்கஉள்ளன. தினமும் 5 மணி நேரம் இணையதள வழியில் பயிற்சி வகுப்புகள்நடைபெறும். இதற்கு கட்டணமாக ரூ.9,500 செலுத்த வேண்டும்.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், கரோனாதொற்றால் உயிரிழந்த பெற்றோரின் குழந்தைகள் இலவசமாக பயிற்சிபெறலாம். விருப்பமுள்ளவர்கள் https://www.sirc-icai.org/view-batches.php என்ற முகவரியில் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 7358506400, 8220522669, 9677126011 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x