Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

வளர்ச்சி கொள்கை குழுவினர் முதல்வருடன் ஆலோசனை : உறுப்பினர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

முதல்வர் ஸ்டாலினை மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். கொள்கை வகுத்தல் தொடர்பாக துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மாநில திட்டக் குழு கடந்த 2020-ம் ஆண்டு மாநில வளர்ச்சிகொள்கைக் குழுவாக மாற்றப்பட்டது. தற்போது ஆட்சி மாற்றம்ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த6-ம் தேதி இந்த குழு திருத்தியமைக்கப்பட்டது.

உறுப்பினர்கள் நியமனம்

அதன்படி, இக்குழுவின் துணைத் தலைவராக பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் மற்றும்உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தலைமையில் அனைத்து உறுப்பினர்களும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்து, மாநிலத்துக்கான கொள்கைகள் வகுத்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், இக்குழுவில் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:

துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் - வேளாண்மை கொள்கை,திட்டமிடல். முழுநேர உறுப்பினர் ராம.சீனுவாசன் - திட்டம் ஒருங்கிணைப்பு. பகுதிநேர உறுப்பினர்கள் ம.விஜயபாஸ்கர் - கல்வி, வேலைவாய்ப்பு. சுல்தான் அகமது இஸ்மாயில் - நில பயன்பாடு. எம்.தீனபந்து - ஊரக வளர்ச்சி, மாவட்ட திட்டமிடல். டிஆர்பி ராஜா எம்எல்ஏ - வேளாண்மை கொள்கை, திட்டமிடல். மல்லிகா சீனிவாசன் - தொழிற்சாலை, எரிசக்தி, போக்குவரத்து. டாக்டர் ஜே.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன், நர்த்தகி நடராஜ் - சுகாதாரம், சமூக நலம்.

இவ்வாறு அவர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x