Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்கள் நிரப்ப கோரிக்கை :

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பர்கூர் அரசு மகளிர் கலைக்கல்லூரி, ஓசூர் அரசுக் கல்லூரிகளில் கடந்த 2 ஆண்டுகளாக கல்லூரி முதல்வர்கள் நியமிக்கப் படவில்லை. இதனால் கல்லூரிப் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மருத்துவர் தாமோதரன் கூறியதாவது:

கரோனா காலத்தில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதேபோல், அடுத்த மாதம் கல்லூரிகள் தொடங்க உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அரசுக் கல்லூரி முதல்வர் மற்றும் 2-ம் நிலை முதல்வர் பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் 60-க்கும் மேற்பட்ட அரசுக் கல்லூரிகளில், முதல்வர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. கடந்த பிப்., மாதம் 47 கல்லூரிகளுக்கு தகுதியான 2-ம் நிலை கல்லூரி முதல்வர்களின் பட்டியலை கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் தயாரித்து வைத்திருந்தது.

ஆனால் தேர்தல் அறிவிப்பால் அவை கிடப்பில் போடப்பட்டன. எனவே தமிழக அரசு, தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கல்லூரி முதல்வர், 2-ம் நிலை முதல்வர் பணியிடங் களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x