Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட : கீழடி அகழாய்வு மீண்டும் தொடக்கம் :

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் பிப்.13-ம் தேதி முதல் 7-ம்கட்ட அகழாய்வுப் பணி நடந்து வருகிறது. மண் குவளை, பானை, பகடை, உழவுக் கருவி, காதில் அணியும் தங்க வளையம் உள்ளிட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மே 10-ம் தேதி கரோனா ஊடரங்கு அமல்படுத்தியதை அடுத்து, அகழாய்வுப் பணியை தொல்லியல் துறை நிறுத்தியது. ஆனால், கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணி மட்டும் நடந்து வந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வால் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களிலும் அகழாய்வுப் பணிகள் நேற்று மீண்டும் தொடங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x