Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றிச்செல்லும் - லாரிகளுக்கு அபராதம் விதிக்கும் போலீஸார் : லாரி உரிமையாளர்கள் கவலை

கரோனா ஊரடங்கு காலத்தில் ொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கலாரிகள் மூலம் பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஒவ்வொரு மாவட்ட எல்லையிலும் அமைக்கப்பட்டுள்ள காவல் சோதனைச்சாவடியில் லாரிகளுக்கு ரூ.200 முதல் ரூ.1,200 வரை அபராதம் விதிக்கப்படுவதால், லாரி உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க மத்திய குழு உறுப்பினர் பி.கணேஷ் குமார்கூறியதாவது: டீசல் விலை உச்சத்தை தொட்டுள்ளது. லாரிவாடகை கட்டணம் 30 சதவீதம்வரை குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை இயக்காவிட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். கரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து லாரி ஓட்டுநர்கள் பணி செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு மாவட்ட எல்லையில் உள்ள காவல் மற்றும் சுங்கச்சாவடி அருகே சோதனையில் ஈடுபடும் போலீஸார், அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றிச்செல்லும் லாரிகளின் ஓட்டுநர்களுக்கு சீருடை அணியவில்லை உள்ளிட்ட ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி சுமார்ரூ.200 வரை அபராதம் விதிக்கின்றனர். சில நேரங்களில் பல காரணங்களை குறிப்பிட்டு ரூ.1,200 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. பல இடங்களில் காய்கறி ஏற்றிச் செல்லும் லாரிகளை போகச் சொல்லிவிட்டு, தானியங்கி கருவியில் அபராதம் விதிக்கின்றனர்.

3-ம் நபர் காப்பீட்டுத் தொகை உயர்வு, சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு, டீசல் விலை உயர்வு என தொடர் பாதிப்பில் நாங்கள் இருக்கும் நிலையில் போலீஸாரின் நடவடிக்கை எங்களுக்கு சுமையைஅதிகமாக்குகிறது. எந்த சலுகையும் வழங்கப்படாத லாரி போக்குவரத்துக்கு இந்த அளவுக்கு அழுத்தம் தேவையில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x