Published : 08 Jun 2021 03:12 am

Updated : 08 Jun 2021 03:12 am

 

Published : 08 Jun 2021 03:12 AM
Last Updated : 08 Jun 2021 03:12 AM

4 நாட்களுக்கு மழை வாய்ப்பு :

சென்னை

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலைஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் கூறும்போது,

‘‘வெப்பச்சலனம் காரணமாக 8-ம் தேதி,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியமாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 9, 10-ம் தேதிமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும்புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிருஇடங்களில் லேசான மழை பெய்யும்.


11-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையைஒட்டிய மாவட்டங்கள் மற்றும் குமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன்மிதமான மழையும் பெய்யக் கூடும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.

8 முதல் 11-ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக் கடல், தென்மேற்கு அரபிக்கடல் பகுதியிலும், 9, 10-ம்தேதிகளில் மத்திய வங்கக் கடல் பகுதியிலும், 10, 11-ம் தேதிகளில் கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் லட்சத்தீவு பகுதியிலும் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுவீசும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்’’ என்றார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x