Published : 08 Jun 2021 03:12 AM
Last Updated : 08 Jun 2021 03:12 AM

நவம்பர் வரை ரேஷனில் இலவச உணவு தானியம் விநியோகம் - மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி : மத்திய அரசே கொள்முதல் செய்து வழங்கும் என பிரதமர் மோடி அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். படம்: பிடிஐ

புதுடெல்லி

கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும். வரும் நவம்பர் வரை ரேஷனில் இலவசமாக உணவு தானியம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா வைரஸ் பரவத் தொடங் கியது. அப்போது நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி பலமுறை உரை யாற்றினார். கரோனா 2-வது அலையின் போதும் நாட்டு மக்களிடையே பிரதமர் அவ்வப்போது உரையாற்றி வருகிறார்.

நாடு முழுவதும் வைரஸ் தொற்று குறைந்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே நேற்று உரையாற்றினார். அப்போது முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசியதாவது:

கடந்த 100 ஆண்டுகளில் கரோனா வைரஸ் பரவல் மிகப்பெரிய தொற்று நோயாகும். உலக நாடுகளை போன்று இந்தியாவும் கண்ணுக்குத் தெரியாத எதிரியான கரோனா வைரஸுக்கு எதிராக மிகத் தீவிரமாக போராடி வருகிறது.

இந்திய வரலாற்றில் இல்லாத வகை யில் ஆக்சிஜன் தேவை உயர்ந்தது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஆக்சிஜ னுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. பற்றாக் குறையைப் போக்க மத்திய அரசு போர்க் கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டது. ரயில், விமானம் மூலம் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டது.

ஆக்சிஜன் விநியோக்கும் பணியில் ராணுவம், விமானப் படை, கடற்படை ஈடுபடுத்தப்பட்டன. தற்போது நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தி பல மடங்கு அதி கரிக்கப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன.

தடுப்பூசியே பெரிய ஆயுதம்

கரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசியே மிகப்பெரிய ஆயுதம். கடந்த 60 ஆண்டுகளை ஒப்பிடும்போது, ஒரு தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஆகும். ஆனால், தற்போது மிக குறுகிய காலத்திலேயே இந்தியாவில் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. தற் போது வரை குறிப்பிட்ட நாடுகள் மட்டுமே தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன. இந்தியாவில் ஓராண்டுக்குள் 2 தடுப்பூசி கள் உருவாக்கப்பட்டன.

தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தியதன் மூலம் லட்சக்கணக்கான உயிர் களை காப்பாற்றி உள்ளோம். இதுவரை 23 கோடிக்கும் மேற் பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டிருக்கிறது.

வரும் நாட்களில் கரோனா தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும். நாட்டின் 7 நிறுவனங்களில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் 3 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. மூக்கின் வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்து பரிசோதனையும் நடந்து வரு கிறது. குழந்தைகளுக்கான 2 தடுப்பூசி களும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்த உலக நாடுகளிலும் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தியாவின் கரோனா தடுப்பூசியை எதிர்பார்த்து உலகமே காத்திருக்கிறது.

தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கான கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு மாநிலங்களுக்கு இலவச மாக வழங்கி வருகிறது. இனிமேல் 18 வயது முதல் 44 வயது பிரிவினருக்கான கரோனா தடுப்பூசிகளையும் மாநிலங் களுக்கு மத்திய அரசு இலவசமாக வழங்கும். அதாவது ஒட்டுமொத்த கரோனா தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங் கும். ஜூன் 21-ம் தேதி முதல் புதிய திட்டம் அமல் செய்யப்படும். இதன் மூலம் மாநில அரசுகளின் நிதிச் சுமை குறையும்.

தனியார் மருத்துவமனைகள் வழக் கம்போல 25 சதவீத தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மக்களுக்கு செலுத்தலாம். தடுப்பூசி போட தனியார் மருத்துவமனைகள் ரூ.150 மட்டுமே சேவை கட்டணமாக வசூலிக்க வேண்டும். இதை மாநில அரசுகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

கரோனா தடுப்பூசி தொடர்பாக சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அவர்கள் மக்களின் உயிரோடு விளை யாடிக் கொண்டிருக்கின்றனர். வதந்தி களிடம் இருந்து மக்கள் விலகியிருக்க வேண்டும். தடுப்பூசி தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்தப் பணியை இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

80 கோடி பேர் பயனடைவர்

பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜ்னா திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு 8 மாதங்கள் வரை ரேஷனில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. இதேபோல ஏழைகளின் நலன் கருதி வரும் தீபாவளி வரை, அதாவது நவம்பர் வரை ரேஷனில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும். இதன்மூலம் 80 கோடி பேர் பயன் அடைவர். இந்தியர்களில் ஒருவர்கூட பசியால் வாடக்கூடாது என்பதில் மத்திய அரசு மிக உறுதியாக உள்ளது.

நாட்டில் கரோனா தொற்று குறைந்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் கரோனா ஓய்ந்துவிட்டது என்று கருத வேண்டாம். இந்த நேரத்தில் நாம் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது ஆகிய தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற முடியும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x