Published : 08 Jun 2021 03:13 AM
Last Updated : 08 Jun 2021 03:13 AM

தாம்பரம் நகராட்சியில் காய்கறி மார்கெட் செயல்பட அனுமதியில்லை : தற்காலிக இடத்தில் செயல்பட மட்டும் அனுமதி என ஆட்சியர் தகவல்

தாம்பரம் நகராட்சியில் காய்கறி மார்க்கெட் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாறாக வேறு தற்காலிக இடத்தில் காய்கறி மார்க்கெட் நடக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் இருந்தது போலவே வாகனம் மற்றும் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் மார்க்கெட் திறக்கப்படும்போது ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் ஒரே இடத்தில் கூடும் வாய்ப்பு ஏற்படும். இதனால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகவே மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தாம்பரம் நகராட்சியில் உள்ள மார்கெட்மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மார்கெட் பகுதியை செங்கல்பட்டு ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாவட்டத்தில் மே 12-ம் தேதி உச்சத்தை தொட்டகரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மொத்தம் 451 கட்டுப்பாட்டு பகுதிகள் இருந்த நிலையில் தற்போது அது 70 ஆக குறைந்துள்ளது. நோய் பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருந்தாலும், தொடர்ந்து, நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

அரசு அறிவித்துள்ள தளர்வுகள்அனைத்தும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவே அளிக்கப்பட்டுள்ளன. இதனால், நோய் தொற்று பரவுவது குறைந்துவிட்டது என பொது மக்கள் அலட்சியம் காட்டாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஒரு மாதம் ஊரடங்கு அறிவித்தும் மக்கள் சரியாக ஒத்துழைப்பு அளிக்காததால் தொற்று பாதிப்பை எதிர்பார்த்த அளவுக்கு குறைக்க முடியவில்லை. தாம்பரம் நகராட்சியில் உள்ள, மார்க்கெட்டை இரும்புலியூர் பகுதியில் தற்காலிமாக இடமாற்றுவதற்காக, வியாபாரிகளிடம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சு நடந்துள்ளது. தள்ளுவண்டியில் வியாபாரம் செய்ய, சிலர்அனுமதி கேட்டுள்ளனர். அதற்கேற்ப, தள்ளுவண்டி கடைகளுக்குஅனுமதி வழங்க, நகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொது மக்களும், வியாபாரிகளும் இதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது தாம்பரம்கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

அரசு அறிவித்துள்ள தளர்வுகள் அனைத்தும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவே அளிக்கப்பட்டுள்ளன. இதனால், நோய் தொற்று பரவுவது குறைந்துவிட்டது என அலட்சியம் காட்டாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x