Published : 08 Jun 2021 03:13 AM
Last Updated : 08 Jun 2021 03:13 AM

தனியார் பரிசோதனை மையங்களில் : கூடுதல் கட்டணமா?: புகார் தரலாம் :

புதுச்சேரி: தனியார் பரிசோதனை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் புகார் தர சுகாதாரத்துறை மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரியில் கரோனா பரிசோதனை அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் செய்யப்பட்டு வருகிறது. மேலும், தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு அனுமதிபெற்ற சில தனியார் பரிசோதனை கூடங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தனியார் பரிசோதனை மையங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து ரேபிட் ஆண்டிஜென் பரிசோதனைக்கு ரூ.200 மற்றும் பாதுகாப்பு கவச உடை (பிபிஇ கிட்), போக்குவரத்து, மாதிரிகள் சேகரிப்புக்கு கூடுதல் கட்டணங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படும் பட்சத்தில் பொதுமக்கள் ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம். புகாருக்கு 0413-2229350 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். குறிப்பிட்ட இந்த தொகைக்கு மேல் வசூலிக்கப்படும் மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள் மீதும் அரசு அனுமதி பெறாமல் பரிசோதனை செய்யும் தனியார் பரிசோதனை கூடங்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x