Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM

எஸ்பிஐ வங்கித் தேர்வுக்கு இலவச இணையவழி பயிற்சி :

பாரத ஸ்டேட் வங்கித் தேர்வுக்கான இணையவழி இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாரத ஸ்டேட் வங்கி பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்கவுள்ளவர்களுக்கு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் இலவச பயிற்சி வகுப்பு மே 22-ம் தேதி முதல் இணைய வழியில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த இலவச பயிற்சி வகுப்பு சேவையை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் உருவாக்கப்பட்டுள்ள sbiemptrichy@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பித்து பங்கேற்கலாம். இந்த மின்னஞ்சலுக்கு விண்ணப்பித்த விண்ணப்பத்தின் நகல், செல்போன் எண், முகவரி, கல்வித் தகுதி ஆகிய தகவல்களை அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x