Published : 07 Jun 2021 03:12 AM
Last Updated : 07 Jun 2021 03:12 AM

காஷ்மீர் மாநிலத்தில் : ஹிஸ்புல் தீவிரவாதி சுட்டுக் கொலை :

காஷ்மீரில் நகர் அருகே உள்ள டிரால் என்ற இடத்தில் ஹிஸ்புல் தீவிரவாதி முகமது அமின் மாலிக்கை கடந்த 30-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். ட்ராலில் உள்ள முகாமில் முகமது அமினிடம் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது முகமது அமின் திடீரென அருகில் இருந்த காவலரிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கியை பறித்து சரமாரியாக சுட்டார்.

இதில் காவலர் அம்ஜத் கான் பலத்த காயமடைந்தார். போலீஸார் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தியதில் முகமது அமின் நேற்று முன்தினம் பிற்பகல் உயிரிழந்ததாக போலீஸ் ஐ.ஜி. விஜய் குமார் தெரிவித்தார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x