Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM

சேலம் மாவட்டத்தில் ஜூன் 5 வரை 10 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை :

சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் (5-ம் தேதி) வரை 10 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினசரி 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தவிர, அரசு அங்கீகாரத்துடன் சில தனியார் மருத்துவமனை ஆய்வகங்களிலும் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தற்போது கரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்திருக்கும் நிலையில் கரோனா பரிசோதனை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் முதல் நேற்று முன்தினம் (5-ம் தேதி) வரை 10 லட்சத்து 2 ஆயிரத்து 219 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x