Published : 07 Jun 2021 03:14 AM
Last Updated : 07 Jun 2021 03:14 AM

திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று முதல் ஒப்படைப்பு :

திருச்சி மாநகரில் ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று (ஜூன் 7) முதல் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட உள்ளன.

திருச்சி மாநகரில் ஊரடங்கு விதிகளை அமல்படுத்துவதற்காக மே 15-ம் தேதி முதல் போலீஸார் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த காலகட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 6,610 இருசக்கர வாகனங்கள், 188 மூன்று சக்கர வாகனங்கள், 73 நான்கு சக்கர வாகனங்கள் என 6,871 வாகனங்களை பறிமுதல் செய்து, திருச்சி கே.கே.நகரிலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த வாகனங்களில் குறைந்த பட்சம் 15 நாட்களுக்கு முன் கைப்பற்றப்பட்ட வாகனங்களை தேதி வாரியாக, நாள்தோறும் தகுந்த நேர இடைவெளியில், நாளொன்றுக்கு 250 வாகனங்கள் வீதம் இன்று (ஜூன் 7) முதல் விடு விக்க மாநகர காவல் ஆணை யர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

இப்பணிகளை மேற்கொள்வ தற்காக 2 உதவி ஆணையர்கள் தலைமையில் 2 இன்ஸ் பெக்டர்கள், 4 சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட் டோரைக் கொண்ட குழு அமைக் கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘மே 15 -ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று விடுவிக்கப்பட உள்ளன. அதைத்தொடர்ந்து, முன்னுரிமை அடிப்படையில் வாகனங்கள் தொடர்ந்து விடுவிக்கப்படும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். இந்த வாகனங்களை விடுவிப்பதை முறைப்படி சிசிடிவி கேமராக்க ளில் பதிவு செய்ய வேண்டும். வாகனங்களை விடுவிக்கும் முன் அந்த வாகனங்களுக்கு ஏதேனும் குற்ற வழக்குகளில் தொடர்புள் ளதா என்பதை சிசிடிஎன்எஸ் மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என காவல்துறையினருக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதவிர, வாகனங்கள் கைப் பற்றப்பட்டபோது வழங்கப்பட்ட போலீஸ் நோட்டீஸின் நகல் மற்றும் அந்த வாகனத்துக்குரிய அசல் ஆவணங்களை அந்த வாகனத்தின் உரிமையாளரோ அல்லது உரிமையாளரால் அங்கீகாரக் கடிதம் வழங்கப்பட்ட நபரோ எடுத்துவர வேண்டும். அவ்வாறு வரும் நபர், அவருடைய புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டை அசல் மற்றும் நகலை எடுத்து வர வேண்டும். அவ்வாறு வருவோரிடம் மட்டுமே வாகனங்கள் ஒப்படைக்கப்படும்’' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x