Published : 06 Jun 2021 03:11 am

Updated : 06 Jun 2021 03:11 am

 

Published : 06 Jun 2021 03:11 AM
Last Updated : 06 Jun 2021 03:11 AM

ஜூன் 20-க்குள் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி: அரசு உத்தரவு :

சென்னை

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஜூன் 20-க்குள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்துமுதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:


அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் ஜூன் 20-ம் தேதிக்குள் கரோனா தடுப்பூசி கண்டிப்பாக போடப்பட்டிருக்க வேண்டும்.

தடுப்பூசி போட்டவர்களுக்கு அரசு அளிக்கும் சான்றிதழ் நகலை உரியவரிடம் இருந்து பெற்று அந்தந்த ஒன்றியத்துக்குரிய அலுவலர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அதேபோல், தடுப்பூசிபோடாதவர்களுக்குரிய காரணத்தை ஆதாரத்துடன் பெற்று அறிக்கையை இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x