Published : 05 Jun 2021 03:12 AM
Last Updated : 05 Jun 2021 03:12 AM

போத்தனூர் - பொள்ளாச்சி இடையே மின் வழித்தடத்தில் ரயில் சோதனையோட்டம் :

தெற்கு ரயில்வேயில் உள்ள குறிப்பிட்ட வழித்தடங்களை மின்மயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், பொள்ளாச்சி- போத்தனூர் மற்றும் திண்டுக்கல் - பொள்ளாச்சி -பாலக்காடு வழித்தடங்களும் அடங்கும். இந்தவழித்தடங்களில் மின்மயமாக்கும் பணிகள், கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டன. முதல்கட்டமாக பொள்ளாச்சி -போத்த னூர் வழித்தடத்தில் 38 கி.மீ. தொலைவுக்கு 903மின் கம்பங்கள் அமைத்து, மின் விநியோகம் செய்யும் பணிகள் நிறைவு பெற்றன. இதையடுத்து மின் கம்பங்கள், மின் கம்பிகளின் தரம் குறித்து கடந்த வாரம் ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், பொள்ளாச்சி- பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி - போத்தனூர் இடையே மின் வழித்தடத்தில் நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்ட 3 பெட்டிகளுடன் கூடிய ரயிலை இயக்கி நேற்று சோதனை நடத்தப்பட்டது.

மேலும், கோவை வழியாக மேட்டுப்பாளையம் வரை தண்டவாளங்களின் உறுதி மற்றும் அதிர்வைக் கண்டறியும் வகையிலும், பயணிகளை ஏற்றி, இறக்குவதற்காக நிறுத்தும் இடங்களில் உள்ள தண்டவாளங்களின் உறுதித்தன்மை குறித்தும் பரிசோதிக்கப்பட்டது. போத்தனூர் -மேட்டுப் பாளையம் இடையே 125 கிலோ மீட்டர் வேகத்திலும், மற்ற இடங்களில் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் ரயில் சோதனையோட்டம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x