Published : 05 Jun 2021 03:13 AM
Last Updated : 05 Jun 2021 03:13 AM

கரோனா தகவல்களை அறிவதற்கான - வாட்ஸ்அப் சேவை மூலம் பயனடைந்த 2,753 பேர் : சுகாதாரத்துறை செயலர் தகவல்

புதுச்சேரியில் கரோனா பற்றியவிழிப்புணர்வு மற்றும் தகவல்களை மக்கள் அறிந்து கொள்வதற்கான வாட்ஸ்அப் சேவை ஆரம்பிக்கப்பட்ட இரண்டே நாட்களில் 2,753 பேர் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் அருண் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறிய தாவது:

கரோனா பற்றிய விழிப்புணர்வு மற்றும் தகவல்களை அறிய புதிய முயற்சியாக வாட்ஸ் அப்பில் CHITTI-WhatsApp Chat Bot என்ற சேவையை புதுச்சேரி சுகாதாரத்துறை தொடங்கி யுள்ளது. அதற்கு வாட்ஸ்அப்பில் 7598844833 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி செய்தால் கரோனாபற்றி தகவல்கள் மற்றும் வழிகாட்டல் பற்றிய விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

இதன்மூலம் கரோனா பரிசோதனை மையங்கள், மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைப்பது, கரோனா தடுப்பூசி போடப் படும் மையங்கள், உதவி எண்கள், கருப்பு பூஞ்சை நோய் பற்றிய தகவல்கள், சமீபத்திய கரோனா பற்றிய அறிவிப்புகள், கரோனாவின் சமீபத்திய நிலை, நன்கொடை வழங்க வழிகாட்டுதல் போன்ற அனைத்து விவரங்களையும் விரல் நுனியில் வாட்ஸ்அப் மூலமே தெரிந்து கொள்ளலாம்.

பொதுமக்களின் கருத்துக்களை யும் இதன் மூலமே தெரிவிக்கலாம். இந்த சேவை ஆரம்பித்த இரண்டு நாட்களில் 2,753 நபர் (வெளிநாட்டு இந்தியர்கள் உள்பட) இதன்மூலம் பயனடைந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x