Published : 05 Jun 2021 03:14 am

Updated : 05 Jun 2021 03:14 am

 

Published : 05 Jun 2021 03:14 AM
Last Updated : 05 Jun 2021 03:14 AM

மதுபானங்களை கடத்தியதாக ஒருவர் கைது :

நாட்றாம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குரும்பேரி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (35) என்பவர் அவ் வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தார்.

காவல் துறையினரை கண்டதும் அவர் திரும்பிச்செல்ல முயன்றார். அவரை தடுத்து நிறுத்தி வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் வெளிமாநில மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.


இதைத்தொடர்ந்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x