Published : 04 Jun 2021 03:13 AM
Last Updated : 04 Jun 2021 03:13 AM

பக்தர்கள் இல்லாமல் ஹனுமன் ஜெயந்தி :

திருமலையில் உள்ள ஜபாலி பகுதிதான் ஹனுமன் பிறந்த இடம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த ராம நவமியன்று அறிவித்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு ஜபாலியில் ஹனுமன் ஜெயந்தி மிக விமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. ஆனால்கர்நாடக மாநிலம், ஹம்பி ஹனுமன் கோயில் அறக்கட்டளையினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று ஆந்திர மாநிலம் முழுவதும் ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆனால், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருமலையில் மலைப்பாதையில் 7-ம் மைலில் உள்ள ஹனுமன் சிலைக்கும், திருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரே உள்ள பேடி ஆஞ்சநேயர் கோயிலிலும் பக்தர் இன்றி ஏகாந்தமாக ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதேபோன்று ஜபாலியிலும் ஹனுமன் ஜெயந்தி ஏகாந்தமாகவே கொண்டாடப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x