Published : 04 Jun 2021 03:14 AM
Last Updated : 04 Jun 2021 03:14 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.176 குறைவு :

தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.176 குறைந்து ரூ.37 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை நிலையற்ற தன்மை நீட்டிப்பதால், தங்கம் விலையில் அடிக்கடி ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது. இதற்கு இடையே, சர்வதேச அளவில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.

அந்த வகையில், சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.176 குறைந்து ரூ.37 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது.

22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 625க்கு விற்பனை ஆனது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.4 ஆயிரத்து 647க்கு விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x