Published : 04 Jun 2021 03:14 AM
Last Updated : 04 Jun 2021 03:14 AM

வளர்ப்பு நாயை கொலை செய்தவர் மீது வழக்கு :

மதுரை ஊமச்சிகுளம் பகுதியில் உள்ள குபேரன் நகரைச் சேர்ந்தவர் பொன்னையா(60). இவர் நாய் ஒன்றை வளர்த்தார். இதை கடந்த 1-ம் தேதி தூக்கிட்டுக் கொலை செய்து புதைத்ததாக அப்பகுதியைச் சேர்ந்த மங்கலராஜ் என்பவர் விலங்குகள் நல ஆர்வலர் செம்பியனேந்தலைச் சேர்ந்த விஜயகீதாவுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து விஜயகீதா சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தபோது பொன்னையா தன் நாயை கொலை செய்து அப்பகுதியில் புதைத்திருப்பது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின்பேரில் ஊமச்சிகுளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x