Published : 03 Jun 2021 03:12 AM
Last Updated : 03 Jun 2021 03:12 AM

புதுச்சேரியில் ஒரு மாதத்துக்குப் பிறகு - அமைச்சரவை அமைப்பதில் ரங்கசாமியுடன் பாஜக சமரசம் : துணை முதல்வர் பதவி கைவிடப்பட்டது

புதுச்சேரியில் ஒரு மாதத்துக்கு பிறகு என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள் ளது. இதைத் தொடர்ந்து கூட்டணி அமைச்சரவை விரைவில் அமைய உள்ளது.

மொத்தம் 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ் 10, பாஜக 6 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் கூட்டணி ஆட்சி அமைத்தன. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த 7-ம் தேதி முதல்வராக பதவியேற்றார். அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ரங்கசாமி, சிகிச்சைக்குப் பிறகு வீட்டு தனிமையில் இருந்தார். கடந்த 26-ம் தேதி தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் முன்னிலையில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றனர்.

பேச்சுவார்த்தையில் இழுபறி

துணை முதல்வர் உள்ளிட்ட 3 அமைச்சர்கள், சட்டப்பேரவைத் தலை வர் பதவிகளை பாஜக கோரியது. முதல்வர் ரங்கசாமியோ, 2 அமைச் சர்கள், பேரவை துணைத் தலைவர் பதவிகளை மட்டுமே தர முடியும் என தெரிவித்தார். துணை முதல்வர் பதவி உருவாக்குவதையும் அவர் ஏற்கவில்லை. பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவியதால் அமைச்சரவை அமைப்பதில் சிக்கல் நிலவியது.

ஒரு மாதத்துக்கு பிறகு தற்போது அமைச்சரவை அமைப்பதில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி என்.ஆர்.காங்கிரஸ் முக்கியத் தலைவர்களிடம் கேட்டபோது, ‘‘முதல்வர் ரங்கசாமி நேரடியாக பாஜக மேலிடத்தில் பேசினார். பாஜகவுக்கு இரு அமைச்சர்கள், பேரவைத் தலைவர் பதவிகளை தர சம்மதம் தெரிவித்துள்ளார். அதை பாஜக தரப்பும் ஏற்றுக்கொண்டது. துணை முதல்வர் பதவி கைவிடப்பட்டது. பேரவைத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும். தற்போது தேய்பிறை காலம். அதனால் வளர்பிறையில் அமைச்சர்கள் பதவியேற்பு நடக்கும்’’ என்று தெரிவித்தனர்.

இதனிடையே, அமைச்சர் பதவி களை பெறுவதில் இரு கட்சியிலும் கடும் போட்டி நிலவுகிறது. என்.ஆர்.காங்கிரஸில் தேனீ ஜெயக்குமார், ராஜ வேலு, லட்சுமி நாராயணன் ஆகியோ ருக்கு அமைச்சராகும் வாய்ப்பு இருப்ப தாக கூறப்படுகிறது. சில ஜூனியர் எம்எல்ஏக்களும் அமைச்சர் பதவியை பெற முயற்சித்து வருகின்றனர்.

பாஜகவில் நமச்சிவாயம், ஜான் குமார் ஆகியோருக்கு அமைச்சராகும் வாய்ப்பு உள்ளதாகவும், பேரவைத் தலைவர் பதவிக்கு ஏம்பலம் செல்வம் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x