Published : 03 Jun 2021 03:12 AM
Last Updated : 03 Jun 2021 03:12 AM

குஜராத்தில் டக்-தே புயல் பாதிப்பு- மீனவர்களுக்கு ரூ.105 கோடி நிவாரண நிதி அறிவிப்பு

அரபிக் கடலில் உருவான டக் தே புயல் குஜராத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந் நிலையில் சேதத்தை மதிப்பீடு செய்து மத்திய அரசிடம் மாநிலஅரசு அறிக்கையை அளித்துள் ளது. முதல் கட்ட நிவாரணமாக ரூ.1,000 கோடியை குஜராத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி அறிவித் துள்ளார்.

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக ரூ.105 கோடி நிவாரணத்தை குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சேதமடைந்த 1,000 சிறிய மற்றும் பெரிய படகுகளை சீர்செய்ய ரூ.25 கோடி, முழுவதும் சேதமடைந்த சிறிய ரக படகுகளுக்கு அதன் மதிப்பில் 50 சதவீதம் அல்லது ரூ.75 ஆயிரம் இதில் எது குறைவோ அதை அரசு அளிக்கும்.

சிறிதளவு சேதமடைந்த படகுகளுக்கு அதன் மதிப்பில் 50 சதவீதம் அல்லது ரூ.35 ஆயிரம் இதில் எது குறைவோ அதை அரசு வழங்கும். முழுவதும் சேதமடைந்த நவீன மீன் பிடி படகுக்கு அதன் மதிப்பில் 50 சதவீதம் அல்லது ரூ.5 லட்சம் இதில் எது குறைவோ அது வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வங்கிக் கணக் கில் ரூ.2 ஆயிரத்தை அரசு செலுத்தும். படகுகளை சீர் செய்ய வழங்கப்படும் வங்கிக் கடனுக்கான 10 சதவீத வட்டியை 2 ஆண்டுகளுக்கு அரசு செலுத்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x