Published : 03 Jun 2021 03:13 AM
Last Updated : 03 Jun 2021 03:13 AM

இலவச உழவுப் பணிக்கு பதிவு செய்ய அழைப்பு :

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டாரத்தில் இலவசமாக கோடை உழவு மேற்கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து, அரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்நனர் மோகன் சகாயராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசின் வேளாண் துறை, தனியார் பங்களிப்பு திட்டம் மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர் மூலம் உழவுப்பணி மேற்கொள்ளும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கோடை உழவுப்பணி மேற்கொள்ள விரும்பும் அரூர் வட்டார விவசாயிகள் உடனே பதிவு செய்து பயன்பெறலாம். இத்திட்டம் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு 2ஏக்கர் வரை இலவசமாக உழவுப் பணி செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.

பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்திட வேண்டும். 18004200100 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம். இதுதவிர, வேளாண் இடுபொருட்கள் பெற விரும்பும் விவசாயிகள் வேளாண் அலுவலரை 94862 91404, துணை வேளாண் அலுவலரை 94424 48364, உதவி வேளாண் அலுவரை 73731 17307 ஆகிய எண்களிலும், மேலும், 95855 94002, 97861 95760, 80121 26703 ஆகிய எண்களிலும் வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு இடுபொருட்கள் பெற்று பயனடையலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x