Published : 03 Jun 2021 03:13 am

Updated : 03 Jun 2021 03:13 am

 

Published : 03 Jun 2021 03:13 AM
Last Updated : 03 Jun 2021 03:13 AM

கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு - நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் :

சென்னை

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97- வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கொளத்தூர் தொகுதியில் உள்ள ஜி.கே.எம்.காலனியில், நடைபெற்ற நிகழ்ச்சியில் கரோனா ஊரடங்கு காலத்தில் வேலைவாய்ப்பின்றி இருந்த 100 ஓவியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


மேலும் தனியார் நிறுவனத்தில் பயின்ற 1,499 மாணவ, மாணவியருக்கும், 118 செவிலியர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், சென்னை மாநகராட்சி முன்களப்பணியாளர்கள் 63 பேருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர், கொளத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிகழ்வையும் பாராட்டினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் தாயகம் கவி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x