Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM

ஒரே நாளில் 490 பேர் உயிரிழப்பு - புதிதாக 26,513 பேருக்கு கரோனா : சிகிச்சைக்கு புதிய நெறிமுறைகள் வெளியீடு

சென்னை

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 14,783, பெண்கள் 11,730 என26,513 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 3,332, சென்னையில் 2,467 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 21 லட்சத்து23,029 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை தமிழகம் முழுவதும் 18 லட்சத்து 2,176 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 31,673பேர் குணமடைந்தனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று ஒரே நாளில் நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 490 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 58 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24,722 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பெரம்பலூர் எஸ்.பி. நிஷாபார்த்திபன், இவரது கணவரான அருணாச்சலப் பிரதேச ஐஏஎஸ்அதிகாரி பார்த்திபன் மற்றும்இவர்களது 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆக்சிஜன் அளவு 90-க்கு குறைவானவர்களை மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்ற கரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த ஆணையில் கூறியிருப்பதாவது:

புதிய வழிகாட்டு நெறிகள்

கரோனா அறிகுறிகள் மற்றும்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94 ஆக இருந்தால் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடாது. அவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தலாம். ஆக்சிஜன் அளவு 90 முதல் 94-க்குள்இருப்பவர்கள், ஆரம்ப சுகாதார நிலையம், கரோனா கவனிப்பு மையங்களில் சிகிச்சை பெறலாம்.

ஆக்சிஜன் அளவு 90-க்கு கீழ்உள்ளவர்களை மட்டுமே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். வீட்டு தனிமை, கரோனாகவனிப்பு சிகிச்சை மையம், மருத்துவமனையில் சிகிச்சை பெறும்கரோனா நோயாளிகள் ஆக்சிஜன்அளவை அதிகரிக்கும் வகையில் குப்புற கவிழ்ந்து படுப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x