Published : 02 Jun 2021 03:12 am

Updated : 02 Jun 2021 03:12 am

 

Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM

கோவையில் உற்பத்தி நிறுவனங்கள் இயங்க தடையா? - தெளிவான வழிகாட்டுதலை வெளியிட வேண்டும் : தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

கோவை

கோவையில் தொழில் நிறுவனங்கள் செயல்படுவதில் தெளிவான வழிகாட்டுதல்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான ‘போசியா’ ஒருங் கிணைப்பாளர் ஜே.ஜேம்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:


கோவையில் கரோனா தொற்று தாக்கம் தீவிரமாக உள்ள நிலையில்மிக சொற்ப தொழில் நிறுவனங் களே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவை மாவட்டஆட்சியர் மே 31-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தொழில் அமைப்புகளுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் சில வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

அதன்படி, மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்ற அனைத்து தொழில் நிறுவனங்களும் வரும் 7-ம் தேதி வரை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இத்தொழில் களுக்கு உதிரிபாகங்கள் செய்து வந்த அனைத்து குறு, சிறு தொழிற்சாலைகளின் இயக்கமும் நிறுத்தப்பட வேண்டும் என்ற வகையில் அறிவிப்பு உள்ளது.

அறிவிப்பு தெளிவாக இல்லாத நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டால் அப்படி அறிவிக்கவில்லை, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு இருக்கின்ற தொழிற்சாலைகள் இயங்கலாம் என தெரிவிக்கின்றனர்.

இச்சூழலில் ஜூன் 1-ம் தேதியிட்ட அறிக்கை ஒன்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் தெளிவான தகவல் இல்லை.

இதனால் கோவையில் உள்ள குறு, சிறு தொழில் நிறுவனங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கடுமையான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் தொழில் துறையினர் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x