Published : 02 Jun 2021 03:13 AM
Last Updated : 02 Jun 2021 03:13 AM

விளைபொருள் விற்பனைக்கு கட்டுப்பாட்டு அறை தொடக்கம் :

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழ வகைகள் வேன் மற்றும் தள்ளுவண்டி மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்களுக்கு, காய்கறி வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அதனை சரி செய்வதற்கு மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படுகிறது.

மேலும், வேளாண் இடுபொருட் கள் மற்றும் விளைபொருட்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு வேளாண்மை அலுவலரை 97861 77026 மற்றும் 63834 99210 ஆகிய செல்போன் எண்களிலும், தோட்டக்கலை அலுவலரை 97872 12309 என்ற செல்போன் எண்ணிலும், வேளாண்மை அலுவலரை 94864 30927 என்கிற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என கிருஷ்ணகிரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x