Published : 02 Jun 2021 03:13 AM
Last Updated : 02 Jun 2021 03:13 AM

கோயம்பேடு வியாபாரிகளுக்கு அடையாள அட்டை : வியாபாரிகள் சங்கம் விநியோகம்

சென்னை

போலீஸார் சோதனையிடும்போது காண்பிக்க, கோயம்பேடு சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு, கோயம்பேடு சந்தை வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

கோயம்பேடு சந்தையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்த சந்தைக்கு கடை முதலாளிகள், விற்பனையாளர்கள், தொழிலாளாளர்கள் என சுமார் 9 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இவர்களுக்கு சிஎம்டிஏ நிர்வாகம் சார்பில் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

போலீஸாருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கி இருப்பதால், வியாபாரிகள் வந்து செல்ல இடையூறு இருக்காது என கோயம்பேடு சந்தை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இருப்பினும் சொந்த காரணங்களுக்காக வரும் சிலரும் வியாபாரிகள் எனக் கூறி வாகனத்தில் செல்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் விதிகளை மீறி சுற்றுவோர், வியாபாரிகளை பிரித்து அறிவதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்படுகிறது.

இதனால் கோயம்பேடு சந்தை வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களை மடக்கும் போலீஸார் உரிய ஆவணங்களை கேட்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதை கருத்தில்கொண்டு கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் எம்.தியாகராஜன் கூறும்போது, “வியாபாரிகளுக்கு ஏற்படும் நடைமுறை சிரமங்களை குறைக்கவே இந்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது. தற்போது வியாபாரிகள் அச்சமின்றி இரவு நேரங்களில் சந்தைக்கு வந்து செல்கின்றனர்” என்றார்.

கோயம்பேடு சந்தைக்கு கடை முதலாளிகள், விற்பனையாளர்கள், தொழிலாளாளர்கள் என சுமார் 9 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x