Published : 02 Jun 2021 03:13 am

Updated : 02 Jun 2021 03:13 am

 

Published : 02 Jun 2021 03:13 AM
Last Updated : 02 Jun 2021 03:13 AM

ஜூன் 4 முதல் வைகை அணையில் தண்ணீர் திறப்பு :

சென்னை

மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்காக ஜூன் 4-ம் தேதி முதல் வைகை அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரியாறு பிரதானக் கால்வாய் பாசன பகுதி விவசா யிகளின் கோரிக்கையை ஏற்று பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதியில், முதல் போக பாசன பரப்பான நிலக்கோட்டை வட்டத்தில் 1,797 ஏக்கர், வாடிப்பட்டியில் 16,452 ஏக்கர், மதுரை வடக்கு வட்டத்தில் 26,792 ஏக்கர் என மொத்தம் 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்களுக்கு ஜூன் 4 முதல் 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து 6,739 மில்லியன் கன அடி நீர் திறந்துவிட அரசு உத் தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x