Published : 01 Jun 2021 03:11 AM
Last Updated : 01 Jun 2021 03:11 AM

அண்ணா பல்கலையில் காலியாக உள்ள - துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் : தேடுதல் குழு அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேடுதல் குழு அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிக்கு சரியான நபரை தேர்ந்தெடுப்பதற்காக தேடுதல் குழுவைதமிழக ஆளுநர் கடந்த மார்ச் மாதம்நியமித்தார். அதில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ஜெகதீஷ் குமார், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான ஷீலாராணி சுங்கத்,சென்னை பல்கலை. முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில், அண்ணா பல்கலை. துணைவேந்தர் பதவிக்குதகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேடுதல் குழு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேடுதல் குழுவெளியிட்ட அறிவிப்பில், “அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தகுதியான 70வயதுக்கு குறைவான நபர்கள்விண்ணப்பிக்கலாம். துணைவேந்தர் பதவிக்கான தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் விண்ணப்பத்தை www.annauniv.edu என்றஇணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, nodalofficer2021@annauniv.edu என்ற மின்னஞ்சலுக்கு ஜூன் 30-ம்தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பவேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

துணைவேந்தர் பதவிக்கு தகுதியான நபரை தேர்வு செய்ய 2 மாதங்களுக்கு முன்பாகவே தேடுதல் குழு அமைக்கப்பட்டது. ஆனால், தற்போதுதான் அப்பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. வழக்கமாக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களை தேடுதல் குழு நேரடியாக நேர்காணல் செய்யும். தற்போது இணைய வழியிலேயே நேர்காணல் நடத்த தேடுதல் குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x