Published : 01 Jun 2021 03:13 AM
Last Updated : 01 Jun 2021 03:13 AM

புதுச்சேரியில் கரோனாவால் உயிரிழந்த - பத்திரிக்கையாளர்கள் இருவரின் குடும்பங்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் தலா ரூ. 50 ஆயிரம் நிதியுதவி :

புதுச்சேரி

புதுச்சேரியில் உயிரிழந்த பத்திரிக்கையாளர்கள் இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிதியுதவி செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. இதனை ஆளுநர் தமிழிசை அவர்களது குடும்பத்தினரிடம் வழங்கினார்.

புதுச்சேரி ராஜ்நிவாஸில் நேற்று மாலை நடந்த நிகழ்வில், கரோனாவினால் உயிரிழந்த புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள் ரமேஷ், பரத் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிதியுதவியை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவரும் ஆளுநருமான தமிழிசை அளித்தார்.

அதையடுத்து ஆளுநர் தமிழிசை கூறுகையில், "வரும் காலங்களில் புதுச்சேரியில் செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக பல நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். சங்கத்தின் செயல்பாடுகள் விரைவுப்படுத்தப்படும். " என்று தெரிவித்தார்.

முன்னதாக சுகாதாரத் துறையின் ‘சிட்டி’ கரோனா தகவல் பகிர்வு தளத்தை (chat bot) ஆளுநர் தொடங்கி வைத்தார். தேசிய தகவல் மையத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இத்தளம் கரோனா குறித்த சரியான தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள உதவும். அத்துடன் 75988 77833 என்ற வாட்ஸ்அப் எண்ணின் மூலம் தகவல்களை பெற முடியும். கரோனா பற்றி தவறான தகவல்கள் பல சமூக ஊடகங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதால் சரியான தகவல் தர இம்முறை அமலாகிறது. இதில் புதுச்சேரி கரோனா நிலவரம்,அருகில் உள்ள தடுப்பூசி மற்றும் பரிசோதனை மையம், மருத்துவமனைகளில் படுக்கை இருப்பு ஆகிய தகவல்களை பெற முடியும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x