Published : 31 May 2021 03:12 AM
Last Updated : 31 May 2021 03:12 AM

12 சிறப்பு ரயில்களின் ரத்து நீட்டிப்பு :

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா அச்சத்தால் பயணிகளின் வருகை மிகவும் குறைவாக இருப்பதால், ஏராளமான சிறப்பு ரயில்கள் மே 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டன. தற்போதும் பயணிகள் வருகை இல்லாததால் 12 சிறப்பு ரயில்கள் ரத்து மேலும் ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரல்-சாய் பி நிலையம் (06074) சிறப்பு ரயில் வரும் 4, 11-ம் தேதியிலும், சாய் பி நிலையம்-சென்னை சென்ட்ரல் (06074) சிறப்பு ரயில் வரும் 5, 12-ம் தேதியிலும், சென்னை சென்ட்ரல்-திருப்பதி (06057/06008), கன்னூர்-எர்ணாகுளம் (06305/06306) சிறப்பு ரயில்கள் வரும் 15-ம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகின்றன.

அதேபோல, கோழிக்கோடு-திருவனந்தபுரம் (02075/02076) சிறப்பு ரயில்கள் வரும் 15-ம் தேதி வரையிலும், சென்னை சென்ட்ரல்-விஜயவாடா (02077/02078) சிறப்பு ரயில்கள் வரும் 14-ம் தேதி வரையிலும் ரத்து செய்ய்படுகின்றன.

கொச்சிவேலி-மங்களூர் (06355) சிறப்பு ரயில் வரும் 3, 5, 10, 12-ம் தேதிகளிலும், மங்களூர்-கொச்சிவேலி (06356) சிறப்பு ரயில் வரும் 4, 6, 11, 13-ம் தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x