Published : 30 May 2021 03:11 AM
Last Updated : 30 May 2021 03:11 AM

அரசு பள்ளிகளின் தற்காலிக பணியாளர்கள் - 7,428 பேருக்கு ஊதியம் வழங்க உத்தரவு :

பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் 7,428 தற்காலிக பணியாளர்களுக்கு மே மாத ஊதியம் தருவதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட கருவூலக அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அரசுப் பள்ளிகளில் தற்காலிகஅடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட 7,428 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர் பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பாணை கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்துவிட்டது. இந்த பணியிடங்களுக்கு 2023 டிசம்பர் 31-ம் தேதி வரை 3 ஆண்டுகள் தொடர் பணிநீட்டிப்பு வழங்குவது குறித்த கருத்துரு தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது.

இதையடுத்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரின் கோரிக்கையை ஏற்று 7,428 பணியாளர்களுக்கு மே மாதத்துக்கானஊதியம் மட்டும் வழங்குவதற்கானகொடுப்பாணை அளிக்கப்படுகிறது. எனவே, சார்ந்த அலுவலர்கள் சம்பளப் பட்டியல் தாக்கல் செய்யும்போது, அதை ஏற்று ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x