Published : 29 May 2021 03:13 AM
Last Updated : 29 May 2021 03:13 AM

தமிழ்ப்பேராயம் விருதுகளுக்கு அவகாசம் : எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் அறிவிப்பு

2021-ம் ஆண்டுக்கான தமிழ்ப்பேராயம் விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜுன் 15 வரை நீட்டிக்கப் பட்டுள்ளதாக எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னை எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராயம் சார்பில் சிறந்த தமிழ் நூல்கள், சிறந்த தமிழ்ச் சங்கம், சிறந்த தமிழறிஞர்கள் ஆகிய பிரிவுகளின் 12 விதமான விருதுகளும் ரொக்கப்பரிசுகளும் கடந்த 2012-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. விருதுகள் விவரம் வருமாறு:

1.புதுமைபித்தன் படைப்பிலக்கிய விருது, 2. பாரதியார் கவிதை விருது. 3. அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது. 4.ஜி.யு.போப் மொழி பெயர்ப்பு விருது. 5.ஆ.பெ.ஜே.அப்துல்கலாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு விருது. 6.முத்துதாண்டவர் தமிழிசை விருது. 7.பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது. 8. முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூக நீதி விருது. 9. சிறந்த தமிழ் இதழ் - சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது. 10. சிறந்த தமிழ்ச் சங்கம் - தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது. 11. சிறந்த கலைக்குழு - அருணாசல கவிராயர் விருது. 12. சிறந்த தமிழறிஞர் பாரிவேந்தர் பைந்தமிழ் விருது

படைப்புகள் 2018, 2019, 2020-ம் ஆண்டுகளில் முதல் பதிப்பாக வெளி வந்திருக்க வேண்டும். 2021-ம் ஆண்டு வந்த நூல்கள் தகுதி பெறாது. பரிந்துரை கடிதம் எந்த விருதுக்கு என்று குறிப்பிட்டு 5 பிரதிகளுடன் அனுப்ப வேண்டும். விருதுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே 20 என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விருதுகளுக்கு விண்ணப்பிப்பிப் பதற்கான கடைசி நாள் ஜுன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

படைப்புகள் தொடர்பான பரிந்துரைகளை “செயலர், தமிழ்ப்பேராயம், அறை எண் 518, ஐந்தாவது தளம், பல்கலைக்கழக நிர்வாக கட்டிடம், எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், காட்டாங்குளத்தூர், செங்கல்பட்டு மாவட்டம் 603203” என்ற முகவரிக்கு ஜுன் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை www.srmist.edu.in/tamilperayam/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x