Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM

மேஷம்: பணத் தட்டுப்பாடு ஏற்படும்

மேஷம்: பணத் தட்டுப்பாடு ஏற்படும். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாகக் கூடும்.ரிஷபம்: மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.மிதுனம்: முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப் படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.கடகம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.சிம்மம்: அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும்.கன்னி: உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.துலாம்: அதிரடியாக சில திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களைத் தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மீகவாதிகளின் சந்திப்பு நிகழும்.விருச்சிகம்: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.தனுசு: பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம்.மகரம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவர்ந்து விடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.கும்பம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். ஆன்மிகத்தில் மனம் ஈடுபடும்.மீனம்: மனக்குழப்பங்கள் விலகும். உறவினர், நண்பர்களுடன் நிலவிய மோதல் போக்கு நீங்கும். வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x