Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM

சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட - 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் 18 மாவட்டங்களுக்கு விநியோகம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்

சிப்காட் நிறுவனம் மூலம் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் ரெகுலேட்டர்களை 18 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தற்போது நிலவும் நெருக்கடி யான கரோனா சூழலை கருத்தில் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, சுகாதாரத் துறை மற்றும் உள்ளூர் அமைப்புகளுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தால் (சிப்காட்) தேவையான அளவு ஆக்சிஜன் சாதனங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் சிப்காட் நிறுவனம், சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் துபையில் இருந்து 1,915 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 2,380 ரெகுலேட்டர்கள், 3,250ஆக்சிஜன் மீட்டர்கள், 5 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் நிரப்பிய 800 சிலிண்டர்கள் என ரூ.40 கோடியே 71 லட்சம்செலவில் இறக்குமதி செய்ய ஆணைகள் அளித்துள்ளது. இதுவரை 515 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 1,780 ரெகுலேட்டர்கள், 250 ஆக்சிஜன் மீட்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள கருவிகளை வெகுவிரைவில் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உள்ளூர் நிறுவனங்களிடம் இருந்து ரூ.4 கோடியே 33 லட்சம்மதிப்புள்ள சாதனங்களை சிப்காட்நிறுவனம் கொள்முதல் செய்து,அவற்றை மருத்துவ பணிகளுக்கு வழங்கியுள்ளது. அதன்மூலம் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1,000 சாதாரண படுக்கைகள் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் சிப்காட் நிறுவனம்மூலம் 2 ஆயிரம் காலி ஆக்சிஜன்சிலிண்டர்கள் வாங்கப்பட்டுசென்னை, செங்கல்பட்டு, சிவகங்கை, விழுப்புரம், தூத்துக்குடி,திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு கரோனா சிகிச் சைக்காக வழங்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,400 ஆக்சிஜன்சிலிண்டர்கள் மற்றும் ரெகுலேட்டர்களை 18 மாவட்டங்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பும்பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின்தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கிவைத்தார். அப்போது, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்பி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தொழில்துறை முதன்மைச் செயலர் நா.முருகானந்தம், சிறப்பு செயலர் வி.அருண்ராய், சிப்காட் நிர்வாக இயக்குநர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x