Published : 27 May 2021 03:11 AM
Last Updated : 27 May 2021 03:11 AM

விழுப்புரம் மாவட்டத்தில் - 141 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டன :

கரோனா பாதிப்பால் விழுப்புரம் மாவட்டத்தில் 141 பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா 2-வது அலை தீவிரமாகபரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 500பேர் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் உயிரி ழக்கும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் கரோனா வார்டுகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.

மாவட்டத்தில் ஒரே வீதியில் 3 பேர் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு கரோனா தொற்று இருந்தால் அவர்கள் வசிக்கும் பகுதி தடை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. அப்பகுதி முழுவதும் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்படுவதோடு அந்தபகுதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட நாப்பாளைய தெரு, காமராஜர் வீதி, மகாராஜபுரம் குயவர் தெரு, மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட 18 இடங்கள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளான அரசூர், திருமுண்டீச்சரம், வி.நெற்குணம், பள்ளித்தென்னல், நன்னாடு, தொடர்ந்தனூர், கூனிமேடு, ஒதியத்தூர், ஆகாசம்பட்டு, கோலியனூர், மாம்பழப்பட்டு உள்ளிட்ட105 இடங்கள் என மாவட்டம் முழுவதும் 141 இடங்கள் தடை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப் பட்டுள்ளன.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், அத்தியாவசிய பொருட்கள் ஆகியவை சுகாதாரத் துறை மற்றும் வருவாய் துறையினரால் வழங்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x