Published : 26 May 2021 03:12 AM
Last Updated : 26 May 2021 03:12 AM

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு - ஆக்சிஜன் விநியோகம் அதிகரிப்பு : மத்திய அரசு தகவல்

தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு கடந்த சில தினங்களாக ஆக்சிஜன் விநியோகம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த பிப்ரவரிமாதம் முதல் கரோனா வைரஸின்இரண்டாம் அலை வேகமெடுக்கதொடங்கியது. வைரஸ் பாதிப்புகாரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்ததால், மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும், ஆக்சிஜனுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆக்சிஜன் கிடைக்காமலேயே நூற்றுக்கணக்கான நோயாளிகள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டின. இதன் ஒரு பகுதியாக, ஆக்சிஜன் சிலிண்டர்களை ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியது. அதன்படி, கடந்த மாதம் 19-ம் தேதி முதலாக 247 ரயில்களில் இந்த ஆக்சிஜன் விநியோகப் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை (மே 24) 15 மாநிலங்களுக்கு 16,023 டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் டெல்லிக்கும், உத்தரபிரதேசத்துக்கும் மட்டும் 8,249 டன் ஆக்சிஜன் (மொத்த விநியோகத்தில் பாதி) விநியோகிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய தென் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்யப்படும் அளவு கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழகத்துக்கு இதுவரை 1,024 டன் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையிலான 5 தினங்களில் மட்டும் தமிழகத்துக்கான ஆக்சி ஜன் விநியோகம் 75 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கர்நாடகா இதுவரை 1,063 டன் ஆக்சிஜனை பெற்றுள்ளது. இதேபோல, கேரளா, ஆந்திராவுக்கும் அதிக அளவில் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x