Published : 25 May 2021 03:11 AM
Last Updated : 25 May 2021 03:11 AM

ஸ்டெர்லைட் ஆலையில் 135 டன் ஆக்சிஜன் உற்பத்தி : இதுவரை 10 மாவட்டங்களுக்கு விநியோகம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இதுவரை 135 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, 10 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையும் அதி கரித்துள்ளது. இதையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில், கடந்த 12-ம் தேதி இரவு மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது.

ஆனால், மறுநாளே தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இஸ்ரோ வல்லுநர் குழு உதவியுடன் ஒரு வாரத்துக்குப் பிறகு தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன், தென்மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

முதலில் தினசரி 10 டன் அளவுக்கு ஆக்சிஜன் உற்பத்தி இருந்தது. படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் 29 டன் என்ற அளவை எட்டியது. முதல் இரு தினங்கள் 2 டேங்கர் லாரிகள் மூலம் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டது. பின் னர், 3 டேங்கர்களாக உயர்ந்தது. நேற்று முன்தினம் 5 டேங்கர் லாரிகளில் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு இதுவரை 135.23 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட் டுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, தேனி, நாமக்கல் மாவட் டங்களுக்கு 28.12 டன் திரவ ஆக் சிஜன் விநியோகம் செய்யப்பட் டுள்ளது. இதுவரை 10 மாவட்டங் களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட் டுள்ளது. அரசு வழிகாட்டுதலின்படி தேவைப்படும் இடங்களுக்கு திரவ ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்படு வதாக ஸ்டெர்லைட் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x