Published : 24 May 2021 03:10 AM
Last Updated : 24 May 2021 03:10 AM

கிராமங்களில் தொற்று பரவல் அதிகரிப்பு - அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைகரோனா மையங்களாக மாற்ற வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மற்றொருபுறம் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்படாமலேயே கிராமங்களில் பலர் உயிரிழந்து கொண்டிருக்கும் துயரமும் நடக்கிறது. கிராமங்களில் கரோனா சிகிச்சை குறித்த விழிப்புணர்வும், அதற்கான வசதிகளும் இல்லாததே இதற்கு காரணமாகும்.

கிராமங்களில் வாழும் மக்களில் பெரும்பான்மையினருக்கு கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லை. ஒருவேளைதொற்று உறுதி செய்யப்பாட்டாலும்கூட அவர்களுக்கு உள்ளூரில் மருத்துவ வசதிகள் கிடைக்காததும், வெளியூர்களில் மருத்துவம் பெறுவதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் இல்லாததும்தான் இத்தகைய உயிரிழப்புகளுக்கு காரணம்.

கிராமங்களிலும் மருத்துவ வசதியை ஏற்படுத்துவதன் மூலம்தான் மக்களை காப்பாற்ற முடியும். அதற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றவேண்டும். தமிழகம் முழுவதும் 1,806 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. 422 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா20 படுக்கைகளும், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 50 படுக்கைகளும் கொண்ட முதல் நிலை கரோனாசிகிச்சை மையங்களை தொடங்குவதன் மூலம் 57,120 படுக்கைகள் ஏற்படுத்தலாம்.

தேவைப்பட்டால் பள்ளிகளை தற்காலிக மருத்துவ மையங்களாக மாற்றி சிகிச்சை அளிக்கலாம். ஒவ்வொரு கிராமத்திலும் கரோனா பாதிப்புகள் குறித்துகிராம நிர்வாக அதிகாரியிடம் அறிக்கை பெற்று அதனடிப்படையில் சோதனை மற்றும் சிகிச்சை செய்ய வேண்டும். எனவே, ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல்நிலை கரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x