Published : 22 May 2021 03:11 AM
Last Updated : 22 May 2021 03:11 AM

மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்

மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். சகோதரர் வகையில் நன்மை கிட்டும். பணவரவு திருப்தி தரும்.ரிஷபம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.மிதுனம்: வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முயற்சிப் பீர்கள். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். பிரார்த்தனைகள் நிறைவேறும். மூத்த சகோதரர் தக்க சமயத்தில் உதவுவார்.கடகம்: நீண்டநாட்களாக நீடித்துவந்த குழப்பங்களுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். விலகியிருந்த சொந்தபந்தங்கள் மீண்டும் வருவார்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.சிம்மம்: காரியங்களை முடிப்பதில் இருந்த தடுமாற்றம் மாறும். குடும்பத்தில் குதூகலமான சூழல் காணப்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். கலைப்பொருட்கள் சேரும்.கன்னி: வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப் படுவீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து செல்லுங்கள். சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள்.துலாம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் எதிர்பாராத செலவு ஏற்படும். யாருக்காகவும் உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம்.விருச்சிகம்: பரபரப்புடன் காணப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் முடிவுக்கு வரும்.தனுசு: பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பாராத வகையில் பண வரவு உண்டு. குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.மகரம்: புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உங்கள் மேல் அக்கறை கொண்ட நண்பர்களைச் சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும்.கும்பம்: உணர்ச்சி வேகத்தில் முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும்.மீனம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. வாகனம் செலவு வைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x