Published : 22 May 2021 03:12 am

Updated : 22 May 2021 03:12 am

 

Published : 22 May 2021 03:12 AM
Last Updated : 22 May 2021 03:12 AM

காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் - 200 படுக்கைகளுடன் கரோனா சிறப்பு மருத்துவ மையம் திறப்பு :

கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்காக எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 200 படுக்கை வசதியுடன் தனி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதை இணை துணைவேந்தர் லெப்டினன்ட் கர்னல் டாக்டர் ஏ.ரவிக்குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

சென்னை

கரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 200 படுக்கை வசதியுடன் தனி சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:


செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் மூலம் இயங்கி வரும் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் காய்ச்சல் மற்றும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நாள்தோறும் 150 முதல் 170 பேர் சிகிச்சைக்காக வருகின்றனர்.

இவர்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட 30 பேர் வரை அனுமதிக் கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது கரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவன வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர், இணைவேந்தர் பி.சத்தியநாராயணன் ஏற்பாட்டில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எம் பிளாக்பகுதியில் புதிதாக 200 படுக்கை வசதியுடன் தனி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் 100 படுக்கை வசதி ஆங்கில வழி மருத்துவ சிகிச்சை அளிக்கவும்,100 படுக்கை வசதிசித்தா, ஆயர்வேதம், ஹோமியோபதி ஆகிய இந்திய மருத்துவ சிகிச்சைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆயூஸ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி சென்னை தி.நகர்அரிமா சங்க அறக்கட்டளை மூலமாக கே.கே.நகரில் நடத்தப்பட்டு வரும் ஆயுர்வேதா மருத்துவமனையின் ஒத்துழைப்புடன் இந்த சித்தா, ஆயர் வேதம், ஹோமியோபதி சிகிச்சை மையம் இயங்கும்.

இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த மையத்தை எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இணை துணைவேந்தர் லெப்டினன்ட் கர்னல் டாக்டர் ஏ.ரவிக்குமார் தொடங்கி வைத்தார். இதில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பதிவாளர் (பொறுப்பு) எஸ்.பொன்னுசாமி, எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ஏ.சுந்தரம், எஸ்ஆர்எம் பல் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் விவேக் ஆகியோர் பங்கேற்றனர். 


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

89 :

இன்றைய செய்தி

More From this Author

x