Published : 21 May 2021 03:12 AM
Last Updated : 21 May 2021 03:12 AM

கரோனா பரவல் தடுப்புப் பணிகள் - திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு :

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தேசுமுகிபேட்டையில் கரோனா தொற்று தடுப்புப் பணிகளை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ்.

மாமல்லபுரம்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள தேசுமுகிபேட்டையில் ஒரே தெருவில் 12-ம் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதேபோல, பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

பேரூராட்சியில் சுகாதாரப் பணிகளை முறையாக மேற்கொள்ளாததால் தொற்று வேகமாகப் பரவியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கிருமி நாசினி தெளிப்பது,பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் அறிவிப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இவற்றைக் கண்காணிக்க வேண்டிய சுகாதார ஆய்வாளர், அயல் பணியாக சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளார். எனவே, சுகாதார ஆய்வாளரை நியமித்து, கரோனா தடுப்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றுசமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தேசுமுகிபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்கள், அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஆட்சியர், தெருக்களில் தடுப்புகள்அமைத்து, உள்ளே வருவோர் மற்றும் வெளியே செல்வோரைக் கண்காணிக்கவும், பாதிப்பு அதிகமுள்ள தெருக்களில் கிருமிநாசினிதெளித்து தூய்மைப்படுத்தவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, பேரூராட்சிசெயல் அலுவலர் திருஞானசம்பந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x