Published : 20 May 2021 03:11 AM
Last Updated : 20 May 2021 03:11 AM

மேஷம்: உறவினர்கள், நண்பர்களுடன் அனுகூலமான நிலை காணப்படும்

மேஷம்: உறவினர்கள், நண்பர்களுடன் அனுகூலமான நிலை காணப்படும். மகளுக்கு தள்ளிப் போன திருமணப் பேச்சுவார்த்தை கைகூடி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். அடிமனதில் இருந்துவந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.மிதுனம்: தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்கும். சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு, மதிப்பு, மரியாதை கூடும்.கடகம்: எதிர்ப்பார்ப்புகள் மளமளவென்று நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி ஏற்படும். கல்யாண பேச்சுவார்த்தை நம்பிக்கையைத் தரும்.சிம்மம்: அடுத்தடுத்த வேலைகளால் சோர்வு வந்து நீங்கும். வீண்பழிச் சொல்லுக்கு ஆளாகக் கூடும். புதிய வாய்ப்புகள் குறித்து தீர யோசித்து முடிவு எடுங்கள். வாகனம் செலவு வைக்கும்.கன்னி: சுபச்செலவு வரும். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தீர்களே, இனி நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டுக்கு குடிபுகுவீர்கள்.துலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது திட்டங்கள் தீட்டுவீர்கள். தியானம், யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.விருச்சிகம்: திடீர் பணவரவு உண்டு. சகோதரர் வகையில் சில காரியங்கள் நிறைவேறும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் ஏற்படும்.தனுசு: நீண்டநாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். புதிய பொறுப்புகள் தேடி வரும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.மகரம்: வீண் விரயம், டென்ஷன், பிள்ளைகளால் பொருட்செலவு வரக் கூடும். வாகனம் பழுதாகும். அக்கம்பக்கத்து வீட்டாருடன் அளவாக பழகுங்கள். எதிலும் நிதானம் தேவை.கும்பம்: பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். வீட்டில் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.மீனம்: மறைமுக எதிர்ப்புகளை சாமர்த்தியமாக வெல்வீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிவந்த பனிப்போர் முடிவுக்கு வரும். குடும்பத்தில் குழப்பம் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x