Published : 20 May 2021 03:11 AM
Last Updated : 20 May 2021 03:11 AM

தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் வழங்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக ரெம்டெசிவிர் மருந்து வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு தனியார் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து தமிழக அரசால் வழங்கப் படுகிறது. மருந்து விற்கப்படும் இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், அவ்வாறு வழங்கப் படும் மருந்து தவறான முறையில் விற்கப்படுவதை தடுக்கவும், மருத் துவமனைகள் மூலம் வழங்கிட கடந்த 16-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதன்படி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளி களுக்கு கிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனைகள் இணையதளத்தில் பதிவு செய்து ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் விரவங்களை அளித்து, ரெம்டெசிவிர் மருந்தை பெற்றுக் கொள்வதற்கான வசதி ‘tnmsc.tn.gov.in’ என்ற இணைய தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பதிவு செய்யும் மருத்துவமனை களுக்கு சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களில் ரெம்டெசிவிர் மருந்துக் குப்பிகள் வழங்கப்படும்.

இந்த முறையில் இதுவரை 343 தனியார் மருத்துவமனைகள் பதிவு செய்துள்ளன. இவற்றில் 151 மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் மருந்துக்கான கோரிக்கைகளை நோயாளிகள் விவரங்களுடன் பதிவு செய்துள்ளன. இவற்றுக்கு இந்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட் டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் உள்ள விற்பனை மையத்தில் நேற்று தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக 25 மருத்துவமனைகளுக்கு 960 ரெம் டெசிவிர் மருந்துக் குப்பிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சட்டப் பேரவை உறுப்பினர் ஐ.பரந் தாமன், மருத்துவத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநர் பு.உமாநாத் உள்ளிட்டோர் பங் கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x