Published : 20 May 2021 03:14 AM
Last Updated : 20 May 2021 03:14 AM

1,340 பேருக்கு கரோனா தொற்று :

வேலூர்/திருவண்ணாமலை

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டிருந்தனர். இதில், 30 ஆயிரத்து 587 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 750 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் நேற்று ஒரே நாளில் 400 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காட்பாடி காந்திநகர், கல்புதூர், பழைய காட்பாடி, சத்துவாச்சாரி, ரங்காபுரம், வள்ளலார், தோட்டப்பாளையம், சைதாப் பேட்டை, வேலப்பாடி, சாயிநாதபுரம், பாகாயம் உள்ளிட்ட பகுதிகளில் கரோனா பரவல் அதிகமாக காணப் படுகிறது.

கிராமப்பகுதிகளிலும் நேற்று 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட் டுள்ளனர். வேலூர் மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த 2,400 பேர் தற்போது வரை சிகிச்சையில் உள்ளனர். இதில் 1,400 பேர் வீடுகளிலேயே தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள தெருக்களை இரும்பு தகடுகள் வைத்து மூடி வருகின்றனர்.

வேலூர் மாநகராட்சி 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட சாயிநாதபுரம், வள்ளலார் நகர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று நேற்று உறுதி செய்யப் பட்டிருப்பதால் அப்பகுதியில் உள்ள ஒரு சில தெருக்களில் பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டு அங்கு இரும்பினாலான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தடுப்புகளை மீறி வெளியே யாராவது சுற்றித்திரிந்தால் அபராதம் விதிக்கப்படும், அதையும் மீறி வெளியே வந்தால் கரோனா சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தப்படுவீர்கள் என மாநகராட்சி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கரோனா பரிசோதனை செய்யப்படுபவர்களில் 11 சதவீதம் பேருக்கு மட்டுமே பாதிப்பு இருந்து வருவதாகவும், தமிழகத்தில் பிற மாவட்டங்களை காட்டிலும் வேலூர் மாவட்டத்தில் குறைந்த அளவிலான பாதிப்பு இருப்பதாகவும்,தொற்று பரவல் குறைய வேண்டுமென்றால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

கரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக நேற்று 590 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 32,282-ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளில் 4,594 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கரோனா தொற்றுக்கு மாவட்டத்தில் இதுவரை 363 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x