Published : 19 May 2021 03:12 AM
Last Updated : 19 May 2021 03:12 AM

தடுப்பூசி உற்பத்தியை பெருக்குவது எப்படி? :

கரோனா 2-ம் அலையில் கொத்து கொத்தாக மரணம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் நாளொன்றுக்கு அளிக்கப்படும் தடுப்பூசி டோஸ் அளவு சரிந்து வருகிறது.

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைபோல ஏப்ரல் 1-10 வரையில் தினமும் சராசரியாக 36 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையிலிருந்து, ஏப்ரல் 11-20 வரையிலான நாட்களில் 28 லட்சமாகவும், ஏப்ரல் 21-30 வரையிலான நாட்களில் 24 லட்சமாகவும் மே 1-10 வரையில் வெறும் 17 லட்சமாகவும் சடசடவென சரிந்துள்ளது. போலி செய்திகளால் ஏற்படும் தடுப்பூசி தயக்கம் இதற்கு ஒரு காரணம் என்றாலும், அதைவிட முக்கியக் காரணம் தடுப்பூசி கையிருப்பில் இல்லாமல் இருப்பதுதான். பல தடுப்பூசி மையங்கள் கையிருப்பு இல்லை என்ற அறிவிப்புடன் மூடப்பட்டுள்ளன.

இந்த வேகத்தில் சென்றால் 18 வயதுக்கும் மேற்பட்ட94 கோடி இந்தியர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியை 2021 டிசம்பருக்குள் அளிக்க முடியாது. இன்று உள்ள வேகத்தைப் போல நான்கு மடங்கு அதிக அளவில், அதாவது சராசரியாக தினமும் 73 லட்சம் டோஸ் என்ற விகிதத்தில் தடுப்பூசி அளித்தால்தான் இது சாத்தியம். இந்த இலக்கை அடைய பல தடைக்கற்கள் இருந்தாலும், மிக முக்கிய சவால் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது.

அடுத்த 12 மாதங்களில் அனைவருக்கும் தடுப்பூசி தரவேண்டும் எனில் ஒவ்வொரு மாதமும் 16 கோடி டோஸ் தேவை. அதாவது நாளொன்றுக்கு 54 லட்சம் டோஸ் தேவை. ஆனால், உற்பத்தியோ நாளொன்றுக்கு 25 லட்சம் டோஸ்தான். அடுத்த சில மாதங்களில் உற்பத்தி ஒரு நாளைக்கு 30 லட்சம் டோஸ் ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அதுவும் போதாது. விரைவாக அனைத்து ஆற்றலையும் ஒருங்கிணைத்து தடுப்பூசி உற்பத்தியைப் பெருக்குவது நம் முன் உள்ள முக்கிய சவால் ஆகும். ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 25 கோடி டோஸ் ஒப்பந்த அடிப்படையில் அதன் கூட்டு நிறுவனத்தின் மூலமாக உற்பத்தி செய்யப்பட உள்ளது. என்றாலும் மைனஸ் பதினெட்டு டிகிரி வெப்பநிலையில் இந்தத் தடுப்பூசியை வைத்திருக்க வேண்டும் என்பதால், பட்டிதொட்டி எல்லாம் இதை எடுத்துச் செல்வது கடினம். அத்துடன் உற்பத்தியில் பெரும்பகுதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்றுமதி செய்ய வேண்டியும் வரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x