Published : 19 May 2021 03:12 AM
Last Updated : 19 May 2021 03:12 AM

கரோனா வைரஸ் தடுப்பு பணியில் - கிராமங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் : ஸ்டாலின் உள்ளிட்ட மாநில முதல்வர்கள், அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

கரோனா வைரஸ் தடுப்பு பணியில் கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற காணொலிக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகம், கர்நாடகா, மத்திய பிரதேசம், டெல்லி, பிஹார், அசாம், உத்தராகண்ட், கோவா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களை சேர்ந்த 50 மாவட்டங்களில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக கலந்துரையாடினார். இதில் உள்துறை, பாதுகாப்பு, சுகாதாரத் துறை அமைச் சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் காணொலி வாயிலாக பங்கேற்றனர். இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

கரோனா வைரஸால் எழுந்துள்ள இக்கட்டான சூழ்நிலையில் சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். விடுப்பு, ஓய்வு இன்றி இரவு பகல் பாராமல் உழைத்து வரு கின்றனர். அவர்களின் தியாகம், அர்ப் பணிப்பு உணர்வு அனைவருக்கும் உந்து சக்தியாக உள்ளது. முன்வரிசை யில் நின்று பணியாற்றும் அனைத்து அலுவலர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

போரை வழிநடத்தும் தளபதிகள்

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ் வொரு விதமான சவால் நீடிக்கிறது. எனினும் கரோனா தடுப்பு பணியில் ஈடு பட்டிருக்கும் அலுவலர்கள் தங்கள் மாவட்ட சூழ்நிலைக்கு ஏற்ப புதுமை யான வியூகங்களை கையாண்டு வைரஸ் பரவலை தடுத்து வருகின்ற னர். இவற்றில் நல்ல, சிறந்த நடை முறையை தேர்வு செய்து அனைத்து மாநிலங்களும் பின்பற்றலாம்.

நாடு முழுவதும் கரோனாவுக்கு எதிராக மிகப்பெரிய போர் நடை பெற்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பணியாற்றும் அரசு அலுவலர்கள், போரை வழிநடத்தும் தளபதிகள் ஆவர். உங்களது தலைமை யில்தான் போர் நடைபெறுகிறது. கரோனா வைரஸ் பரவலை தடுக்க உள்ளூர் அளவில் நீங்கள் சிறந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும். கரோனாவுக்கு எதிரான போரில் உங்கள் மாவட்டம் வெற்றி பெற்றால், ஒட்டுமொத்த நாடும் வெற்றி பெற்றதற்கு சமம்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை மிகுந்த விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் பரிசோதனைகளை அதிகரிக்க வேண் டும். உண்மையான தகவல்களை மக் களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். வதந்திகளை தடுக்க வேண்டும்.

ஆக்சிஜன் ஆலை பணி

சில மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. வேறு சில மாநிலங்களில் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் அரசு அலுவலர்கள் மிகுந்த விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.

கரோனா தடுப்பு பணியில் ஒவ் வொரு உயிரையும் காப்பாற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும். கிராமங் களின் வைரஸ் தடுப்பு பணிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் தங்கு தடையின்றி செல்வது உறுதி செய்ய வேண்டும்.

மக்களின் வாழ்க்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது. அனைத்து மாவட்டங்களிலும் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். பி.எம்.கேர்ஸ் நிதி திட்டத் தில் மாவட்ட தலைமை மருத்துவமனை களில் ஆக்சிஜன் ஆலை அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலைகள் செயல்படத் தொடங்கிவிட் டன. அந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு பாராட்டுகளை உரித்தாக்குகிறேன்.

தடுப்பூசியே மிகச் சிறந்த ஆயுதம்

கரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசியே மிகச் சிறந்த ஆயுதம். நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். இதன்மூலம் உயிரிழப்புகளை தடுக்க முடியும். தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் 15 நாட் களுக்கு தேவையான தடுப்பூசிகளை முன்கூட்டியே அனுப்ப திட்டமிட்டுள் ளோம். மாநிலங்களில் தடுப்பூசிகளை வீணாக்கக்கூடாது.

மருத்துவமனைகளில் எவ்வளவு படுக்கை வசதிகள் உள்ளன. கையிருப் பில் எவ்வளவு தடுப்பூசிகள் உள்ளன என்பதை மக்களுக்கு முறையாக தெரியப்படுத்த வேண்டும். உயிர் காக்கும் மருந்துகள் பதுக்குவதை இரும்புகரம் கொண்டு தடுக்க வேண் டும். பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனா வைரஸ் முதல் அலை யின்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அப்போது வேளாண் பணிகளுக்கு எவ்வித தடை யும் விதிக்கப்படவில்லை. கிராமப்புற விவசாயிகள் வயல்களில் சமூக இடை வெளி, கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி அமோக விளைச்சலை கொடுத்தனர். இதுதான் கிராமங்களின் பலம். கிராமவாசிகளிடம் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

மழைக்கால சவால்கள்

வரும் ஜூன் மாதம் நாட்டின் பெரும் பாலான மாநிலங்களில் மழைக்காலம் தொடங்க உள்ளது. பொதுவாக மழைக் காலம் பெரும் சவாலாக இருக்கும். அரசு அலுவலர்களுக்கு கூடுதல் பணிச் சுமைகள் ஏற்படும். மழைக்காலத்தை சமாளிக்கும் வகையில் இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மழைக்காலத்தில் மின் விநி யோகம் தடைபடுவது இயல்பு. இப்போ தைய இக்கட்டான நேரத்தில் மருத்துவ மனைகளில் மின் விநியோகம் தடை பட்டால் மிகப்பெரிய பிரச்சினைகள் ஏற் படும். எனவே மருத்துவமனைகளுக்கு தடையின்றி மின் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

நம் முன்னால் இருக்கும் சவால்கள் மலை போல உள்ளன. ஆனால் நமது மன உறுதி மலையைவிட உயரமானது. உங்களது தலைமைப் பண்பு, திறன்சார்ந்த நடவடிக்கைகளால்தான் கரோனாவை வீழத்த முடியும். உங்களது அனுபவம் மிகப்பெரிய ஆயுதம். கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் உங்களது புதுமை யான, புத்திசாலித்தனமான ஆலோ சனைகளை வரவேற்கிறேன்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x