Published : 19 May 2021 03:13 AM
Last Updated : 19 May 2021 03:13 AM

கரோனா விதிமுறைகளை கடைபிடிக்காததால் - மருத்துவமனைக்கு அபராதம் : கரோனா மையமாக செயல்படவும் தடை

திண்டிவனம் காந்தி நகர் சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனை கரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையில் நேற்று மாநில பொது சுகாதார இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் குருநாதன், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் சண்முகக்கனி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

பின்னர் சுகாதாரத் துறையினர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

இந்த மருத்துவமனை மீதுஎழுந்த புகார்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தினோம். இங்கு கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு நோயாளிகளுக்கும் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து முறையாக விவரங்களை கையாளவேண்டும். ஆனால், எந்த விவரங்களும் தெளிவாக இல்லை. மேலும், கரோனா நோயாளிகளுடன் யாரையும் அனுமதிக்கக் கூடாதுஎன்ற விதியை மருத்துவமனை நிர்வாகம் சரியாக கடைபிடிக்கவில்லை. இதற்காக ரூ.1 லட்சம்அபராதம் விதிக்கப்படுகிறது.கரோனாபாதிப்புகள்குறித்த புள்ளி விவரங்களை அரசுக்குசரியாக சமர்ப்பிக்கவில்லை. இதன் அடிப்படையில் இந்த மருத்துவமனை தொடர்ந்து கரோனா சிகிச்சை மையமாகசெயல்படதடை விதிக்கப் படுகிறது.

இந்த மருத்துவமனையில் உள்ள மருந்து, மாத்திரைகளை ஆய்வு செய்துள்ளோம். இதில், சில மாற்றங்கள் உள்ளது. போலியான மருந்தால், ஒரு டாக்டர் இறந்துவிட்டதாக புகார்கள் வந்தது. புதுச்சேரியில் இருந்து இந்த மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு நபரால் அந்த டாக்டருக்கு மருந்து வழங்கப்பட்டது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த மருந்தை பார்க்கும்போது, போலியான மருந்து என்பதற்கு வாய்ப்பு அதிகளவில் உள்ளது.இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்க உத்தரவிட்டப் பட்டுள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x